இங்கிலாந்து நாட்டின் கவர்ச்சி மாடல் அழகி கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திறாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கவர்ச்சி மாடல் அழகி கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் சமூகவலைதளம் வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் இங்கிலாந்து உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவரை கண்காணிப்பில் வைத்திருந்த MI5 மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸார் தற்போது அவரை அதிரடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வெள்ளியன்று கைது செய்யப்பட்ட கிம்பர்லி ஏற்கனவே பல முறை உயர் அதிகாரிகளால் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைடையே அவர் தங்கியிருந்த பிராட்ஃபோர்டு பகுதி குடியிருப்பை சோதனையிட்ட காவல்துறையினர் அவரை பிணையில் விடுவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற உறுதியின் அடிப்படையிலேயே உளவுத்துறை அதிகாரிகள் கிம்பெர்லியை விடுவித்துள்ளனர்.
சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய கிம்பெர்லி குறித்து செய்தி வெளியிட்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று ஆயுதம் தாங்கிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் அந்த புகைப்படம் போலியானது எனவும் தாம் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை எனவும் கிம்பர்லி தெரிவித்துள்ளார். பிரபல தனியார் பத்திரிகை ஒன்றில் கிம்பர்லியின் நிர்வாண புகைப்படம் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments