Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 9, 2016

சிறுமியின் உயிரை காவு வாங்கிய 'மத' சம்பிரதாயம்!

13yr girl dead due to fasting

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆராதனா. 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை செகந்திராபாத் பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஆராதனாவை அவருடைய பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் குழந்தை துறவியாக ஆராதித்து வந்தனர். ஜைன மத வழக்கப்படி அவரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் ஊக்குவித்திருக்கின்றனர்.

அதன்படி ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாவிரதத்தை ஆராதனா மேற்கொண்டார். 68 நாட்கள் உண்ணாவிரதத்தை கடந்த 1ஆம் தேதி முடித்தார். அதன் பிறகு 2 நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே உட்கொண்டுள்ளார்.

இதனால் இரத்த அழுத்தம் குறைந்து அவருடைய உடல்நிலை மோசமானது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 3ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஆராதனா அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுமியின் மரணம் குறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். அதன்படி இது பற்றிய விசாரணைக்கு ஐதராபாத்  கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் துணை ஆணையர் சுமதி கூறுகையில், ஆராதனா இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை உண்ணாவிரதம் இருக்குமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic