ஆளும் கட்சி சின்னங்களை அரசு இடங்களில் பயன்படுத்த தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் தனது தேர்தல் சின்னமான யானையை அரசு எந்திரங்கள் மூலமாகவும், பொது இடங்களிலும் பரவலாக பயன்படுத்தியதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த காமன் காஸ் தொண்டு நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தலைமை தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதில், ஆட்சி பொறுப்பில் இருக்கும் அரசியல் கட்சிகள், அரசு இடங்களை தேர்தல் பிரசாரத்துக்காக முறைகேடாக பயன்படுத்திக் கொள்வதையும், அரசின் நிதியை தங்களுடைய கட்சியின் தேர்தல் சின்னத்துக்காக பயன்படுத்திக் கொள்வதையும் தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தது.
இதை ஏற்றுக்கொண்டு தலைமை தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது, தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஆட்சி பொறுப்பை வகிக்கும் அரசியல் கட்சிகள், அரசின் நிதியை தேர்தலுக்காக பயன்படுத்தவும், கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்துக்காக அரசு நிதியை பயன்படுத்தவும், தேர்தல் பிரசாரத்துக்காக அரசின் இடங்களை பயன்படுத்தவும் தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதை மீறி செயல்படுவது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவுக்கு எதிரானது ஆகும்.
மேற்கண்ட இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்தை செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கமிஷனின் மேற்கண்ட வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்தே தேர்தல் கமிஷன் தனது உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே, அரசின் நிதியை கட்சிக்காகவோ, கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்தவோ செலவிடவில்லை என்று பகுஜன் சமாஜ் மறுத்து உள்ளது.
அதே நேரம், ஐக்கிய ஜனதாதளம் தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கிறது.

No comments:
Write comments