ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் கோவை இளைஞர்கள் 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை நடத்தி உள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த ஞாயிற்று கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவர்கள் அபு பஷீர் என்பவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கோவையை சேர்ந்த இளைஞர்களிடம் ஐ.எஸ் இயக்கம் குறித்து பிரச்சாரம் செய்து ஆள்சேர்ப்பில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதை அடுத்து பஷீருக்கு நண்பர்களான உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நவாஸ்கான், ரகுமான் உள்ளிட்ட 11 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து 8 பேரிடமும், ரகசிய இடம் ஒன்றில் 3 பேரிடமும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. 3வது நாளாக நேற்றும் தொடர்ந்த விசாரணையில் முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐ.எஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த தகவலின்படியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள அதிகாரிகள் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 4வது நாளாக இன்றும் இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments