இந்தியாவில் நடிக்க தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் நடிகர்களுக்கு கபாலி புகழ் நடிகை ராதிகா ஆப்தே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சல்மான்கான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் மற்றும் ஓம்புரி ஆகியோர் குரல் எழுப்பினர்.
பரபரப்பான இந்த சூழலில், நடிகை ராதிகா ஆப்தே நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், வெளியே வந்த அவரிடம் பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய படங்களில் விதிக்கப்பட்ட தடை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராதிகா ஆப்தே பதில் அளிக்கையில், ‘‘சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘வாட்ச்’ (கைகடிகாரம்) நிறுவனங்கள் இந்தியாவில் வந்து கடைகளை திறக்கும் போது, பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிக்கக்கூடாதா?. அந்நாட்டு நடிகர்கள் இங்கு வந்து நடிக்கட்டும். இது தான் என்னுடைய நிலைப்பாடு’’ என்று கூறினார்.
No comments:
Write comments