Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 10, 2016

சு.சாமி சொன்னது அவருடைய சொந்த கருத்து..!

samy statement is his own and not from party

காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான், மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்று அவர் கூறினார்.  இரு மாநில தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று முரளிதர ராவ் தெரிவித்தார். 

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று கூறிய அவர் பாரதிய ஜனதா பிரமுகர்கள் கொலை விசயத்தில் தொடர்புடையவர்கள் மீது மேண்மையான அணுகு முறையை தமிழக அரசு பின்பற்றுவதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் உடல்நிலையை கருதி துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கூறாது என்று முரளிதர ராவ் தெரிவித்தார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது என்று கூறிய அவர் இந்த விஷயத்தில் சுப்பிரமணியசாமி கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic