Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 10, 2016

ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதலில் 140 பேர் பலி!

saudi attacked yemen 140 killed

ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 140பேர் உயிரிழந்தனர். மேலும், 500 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரபு நாடுகளில் ஏமனும் ஒன்று. இங்கு அரசுக்கு எதிராக போராடி வரும் ஹோதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று  முன்தினம் ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளராக இருந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதி நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் நடந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக வான்வழியாக விமானம் மூலம் சவுதி அரேபியா கூட்டுப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே  இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 140 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகின்றது.

இந்த வான் வழி தாக்குதல் குறித்து ஐ.நாவின் மனித உரிமை இணைப்பாளர் ஜேமீ கோல்டுரிக் கூறுகையில், ‘‘இத்தாக்குதல் மனித உரிமை மீறிய செயல். இதை உடனடியாக சவுதி தலைமையிலான கூட்டணியானது  நிறுத்த வேண்டும்’’ என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic