Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 11, 2016

துபாயில் உலகிலேயே உயர்ந்த கட்டிடம் எழுப்ப அஸ்திவாரம் இடப்பட்டது..!

world's tallest building in dubai

உலகிலேயே உயரமான கட்டிடத்தை எழுப்ப துபாய் அரசாங்கம் அஸ்திவாரம் இட்டுள்ளது. இதற்கான விழா நேற்று துபாயில் நடைபெற்றது.

தற்போது துபாயில் இருக்கும் புரூஜ் கலிபா என்ற கட்டிடமே உலகின் உயரமான கட்டிடமாகும். இது சுமார் 2700 அடி உயரமாகும். தற்போது அதனை முறியடிக்கும் வகையில் துபாய் அரசாங்கம் மற்றொரு கட்டிடத்தை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளது. இதற்கான விழா நேற்ரு துபாய் கிரீக் துறைமுகம் அருகே நடைபெற்றது. இதில் துபாய் மன்னர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் கலந்து கொண்டார்.

இந்த கட்டிடம் வரும் 2020 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றும் அப்போது இதுவே உலகில் மிக உயர்ந்த கட்டிடமாக கருதப்படும் என இதன் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் இமார் நிறுவனம் தெரிவித்துள்லது. இருப்பினும் இதன் உயரம் எவ்வளவும் இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதனை கட்டி முடிக்க சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கருதப்படுகிறது.

முன்னதாக சவுதி அரேபியா அரசாங்கம் புரூஜ் கலிபாவை முறியடிக்கும் வகையில் ஜித்தா நகரில் உயர்ந்த கட்டிடத்தை எழுப்பிக்கொண்டிருக்கின்ற சமயத்தில் துபாய் அரசின் இந்த அறிவிப்பு சவுதியை அலறவைத்துள்ளது. அரபு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்த கட்டிடங்களை எழுப்பி வருகிறது என்பதே இதன் மூலம் தெரியவருகிறது.

துபாய், சவுதி போன்ற நாடுகளில் போக்குவரத்து மற்றும் இன்ன பிற சிறிய சிறிய குற்றங்களுக்காக கடுமையான தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இந்திய ரூபாயில் குறைந்தபட்சம் அபராதத்தொகை மட்டும் 4000தை தாண்டும். இவ்விரு நாடுகளிலும் அபராதத்தை தொகை மட்டுமே ஆண்டொன்றுக்கு பில்லியன் கணக்கில் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (அப்படியானால் ஏன் இந்த மாதிரி கட்டிடம் கட்டமாட்டார்கள் என்று கேட்கிறீர்களோ..?)

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic