Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

அம்மனாகவும் நடிப்போம், அம்மனமாகவும் நடிப்போம்...!

hurting religious sentiments

இந்தியாவில் மத உணர்வு புண்படுத்தப்படுகிறது என்கிற ரீதியில் பல வழக்குகள் அவ்வப்போது பதிவு செய்யப்படுவதுண்டு. பிற மத மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது என்கிற எண்ணம் அந்தந்த வழக்குகள் பற்றிய செய்திகள் வெளிவந்த பின்னரே தெரிகிறது.

ஒரு மதத்தின் உணர்வுகள் புண்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது அந்த செய்தி எந்தளவிற்கு பரவப்படுகிறதோ அதன் அளவை வைத்தே அந்த பிரச்சனையின் வீரியம் பார்க்கப்படுகிறது. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்து இல்லை. எல்லா மதங்களுமே மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் அதிகம் பரபப்படும் செய்திகள் மட்டுமே விஸ்வரூபம் எடுக்கிறது. ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட டாவின்சி கோட், இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ், பாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட பி.கே, கோலிவுட்டில் தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் இப்படி எல்லாமே இந்த வகையைச்சேர்ந்ததுதான்.

ஒரு விசயத்தை பிரச்சனையாக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதே இந்திய அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.

சினிமாத்துறையில் அதிலும் தமிழ் சினிமாவில் காலங்காலமாகவே ஒரு வித வழிமுறையை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக இந்து மதத்தை கேலி செய்வது, கிண்டல் செய்வது போன்ற எண்ணற்ற காட்சிகள் இடம்பெறுகின்றது. ஆனால் அவற்றை யாருமே சீண்டுவதில்லை ஒரு சில திரைப்படங்களை தவிற. காரனம் மேலே சொன்னது போல எந்த திரைப்படத்தை பிரச்சனையாக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிக்கக்கூடிய நடிகைகள் காசு கொடுத்தால் அம்மனாகவும் நடிக்கிறார்கள், அம்மனமாகவும் நடிக்கிறார்கள். தேவியகாவும் நடிக்கிறார்கள், தே__யாகவும் நடிக்கிறார்கள்.

ஆன்மீகத்திற்கான வழிபாடுகள் நடத்தப்படவேண்டிய கோயில் ஸ்தலங்கள் காதலை தெரிவிக்கும் இடமாகவும், காதலையை தேடும் இடமாகவும் சித்தரிக்கிறார்கள். கோயில்களில் பக்தர்களுக்கும் அருள் கொடுக்கும் சாமி சிலைகளிடம் தங்களுடைய காதலுக்கு உதவி செய்ய அழைக்கிறார்கள். இப்படி எண்ணற்ற காட்சிகள், கதைகள் காலங்காலமாக தமிழ் சினிமாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றையெலாம் அரசியல்வாதிகள் சீண்டுவதில்லை. காரணம் எந்த பிரச்சனையை கையில் எடுத்தால் பிரபலம் அடையலாம் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic