கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம், ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
சுஷாந்த் சிங், கியாரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை, நீர்ஜ் பாண்டே இயக்கியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து, வெளியிட்டுள்ள தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்தியாவில் மட்டும் 4,500 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. 2 வாரங்கள் கடந்த நிலையில், தற்போது ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனிக்கு, இந்தியாவில் எந்தளவு வரவேற்பு உள்ளதென்பதை, இந்த சினிமாப் படம் உணர்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments