பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்கிருந்த தீவிரிவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சந்தேகிப்பவர்கள் பாகிஸ்தான் செல்லட்டும் என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் உரி இராணுவ தலைமையகத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டியது, ஆனால் இதனை பாகிஸ்தான் தரப்பு முற்றிலுமாக மறுத்து வந்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே பதட்ட சூழ்நிலை நிலவிவருகிறது.
உரி தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லபப்ட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி உட்பட பெரும்பாலானா கட்சிகள் பாராடு தெரிவித்தன. ஆனால் அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நிகழவில்லை என பாகிஸ்தான் தரப்பு மறுத்து வருகிறது. மேலும் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், இதற்கு ஆதாரம் அளிக்க வேண்டுமென பாகிஸ்தான் தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஆதரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரும் ஆதாரம் வழங்க வேண்டுமென கூறி வருகின்றனர்.
இதற்கு மத்திய அமைச்சர் உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஆதாரம் கேட்கும் அரசியல்வாதிகள் பாகிஸ்தானிற்கு செல்லட்டும்." என தெரிவித்தார். தற்போது இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகிறது. இந்தியா தரப்பிலிருந்து உண்மையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துவருகிறது.
மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் சஞ்சய் நிரூபம் கூறும்போது "பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது சுத்த பொய் என்றும், அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காகவும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதற்காகவும் பா.ஜ.க இவ்வாறான கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகிறது. " என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments