Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

அமெரிக்காவை கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கு உண்டு..?

who have guts to raise questions against america?

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபர் வீட்டோ அதிகாரம் மூலம் எடுத்த முடிவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்ற‌ உறுப்பினர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை கோபுரம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா தற்போது சவுதி அரசை குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் சவுதி அரேபியாவிற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை கருத்தில் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட வீட்டோ அதிகாரத்தின் மூலம் இந்த தீர்மானத்தை ரத்து செய்வதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இதனை அடுத்து இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தார்கள் நஷ்ட ஈடு கோரி சர்வதேச நீதிமன்றத்தில் சவுதி அரேபியாவிற்கு எதிராக வழக்கு தொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு சவுதி அரேபியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதனை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே சமயம் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்ப வேண்டியிருக்கிறது. இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்டு அந்த விமானத்தை கட்டிடத்தில் மோதச்செய்ய ஈடுபட்ட பயங்கரவாதிகளில் 18 பேர் சவுதி அரேபியாவைச்சேர்ந்தவர்கள் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பிலிருந்தே சவுதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையே நல்லுறவு இருந்து வருகிறது. அப்படியிருக்க சவுதி நாட்டைச்சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

அமெரிக்கா நிர்வாகத்திற்கும், அதன் உளவு அமைப்பினருக்கும் இத்தகைய தாக்குதல் குறித்து தகவல் எதுவும் முன்னரே தெரியாது என்று வைத்துக்கொண்டாலும், தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலில் ஈடுபட்டது அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பின் லாடன் தான் என எதை ஆதாரமாக வைத்து தெரிவித்தார்? தாக்குதல் நடத்தப்பட்டு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் இதற்கான விசாரணை அறிக்கை ஏன் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை?  பயங்கரவாதி பின்லாடனை பிடித்து விசாரணை நடத்தாமல் ஏன் அவரை சுட்டு கொன்றது அமெரிக்கா? போன்ற கேள்விகளும் எழுகிறது.

மற்றுமொரு மிகப்பெரிய கேள்வி என்னவெனில், இரட்டை கோபுர வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்கள் சவுதி அரேபியாவிடமிருந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கும்போது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்தினர் அமெரிக்காவிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கலாம் அல்லவா?


தங்களுக்கும் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சவுதி அரசு மறுக்கலாம், ஆனால் ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுத்ததை அமெரிக்கா எவ்வாறு மறுக்க முடியும்? அமெரிக்காவிற்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்களுக்காக நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேன்டும். நிச்சயமாக இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்க எந்த முஸ்லிம் நாடுகளுக்கும் தைரியமோ, திராணியோ இல்லை என்பதும் நிஜம்.

அமெரிக்காவைச்சேர்ந்த பல தலைவர்கள் இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படலாம் என அஞ்சுகின்றனர். இதனை நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாகவே வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட அரை மணி நேரம் கழித்து அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தப்படலாம் என 30 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைப்பொறுத்தவரை அவர்கள் தங்களுடைய உயிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களின் உயிர்களை பற்றியான எந்த கவலையும் அவர்களுக்கு இருந்தது கிடையாது. உலக வரலாற்று சம்பவங்களில் இதற்கான உதாரணம் ஏராளம் உண்டு. இரட்டை கோபுர தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 தான், ஆனால் அதன் பிறகு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சுக் ஸ்கியூமர் கூறும்போது, " நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் ஒரு வகையில் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் அமெரிக்கா நடத்திய போர் மூலம் கொல்ல்ப்பவர்களுக்காக நீதி கிடைக்க வேண்டுமே என்பதை இந்த உறுப்பினர்களுக்கு யார் சொல்லி கொடுப்பார்கள்? முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்கா நடத்திய குற்றங்கள் தொடர்பாக யார் கேள்வி எழுப்புவார்கள்?" என கூறினார்.

நன்றி: ஜாவித் ஜாமீல்
புதுடெல்லி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic