Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 19, 2016

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம்!


இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ வீர்ர்கள் பலியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி பின்னிரவு நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டிருந்தன. இந்தநிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், பலியான வீரர்களை தியாகிகள் என்று புகழாரம் சூட்டியும், இந்தியாவின் இந்த ராணுவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று(18/11/2016) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ’தேவையற்ற வகையில் இந்திய வீரர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 7 வீரர்கள் பலியானதை இந்தப் பாராளுமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது’ என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic