ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு முன்னால் பல சவால்கள் நிறைந்திருக்கும் நிலையில், இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதை மொத்த தமிழகமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சசிகலா தன் பெயரைச் சொல்லி ஏதேனும் சிபாரிசுகளுக்காக யாரேனும் வந்தால் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் அதையும் மீறி நெருக்கடி தந்தால் போலீசிடம் புகார் கொடுங்கள் என்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இப்போது, அதே பாணியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தன் உறவினர்களுக்கு தடை போட்டுள்ளார். ‘என் பெயரைச் சொல்லி எந்தவிதமான சிபாரிசுகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் காரியங்களுக்காகவோ அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ சந்திக்கக் கூடாது’ என்று கூறியதோடு, உடனடியாக சென்னை விடுதிகளில் தங்கியிருந்த சில உறவினர்களையும் வேண்டியவர்களையும் ஊருக்கு கிளம்பச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் கிளம்பிச் செல்லவில்லை. உடனே, காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து, ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து கூற சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் தங்கியிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்கள், வேண்டியவர்களை சந்தித்த காவல் துறையினர், ‘அவர்தான் கிளம்பிப் போகச் சொல்லிட்டார்ல இன்னும் ஏன் இங்க இருக்கீங்க’ என்று, பக்குவமாக எடுத்துச் சொல்லி ஊருக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

No comments:
Write comments