Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 17, 2016

என்னையே வெளியில் அனுப்பிட்டாங்க! - நடராஜன்


அதிமுக-வில் பதவிக்காக சிபாரிசு வேண்டிச் சென்றவர்களிடம், தன்னையே வெளியில் அனுப்பிட்டாங்க என்று சசிகலாவின் கணவர் நடராஜன் புலம்பியுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை பொறுப்பேற்கச்சொல்லி அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ., எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், சசிகலாவுக்கு அதிமுக-வினர் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினரும் அதிமுக-வுக்கு தலைமையேற்கும்படி ஆதரவும், வாழ்த்துகளும் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், கட்சிப் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்து சிபாரிசு செய்திடும்படி, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த டி.ஆர்.அன்பழகன் மற்றும் சிலர், அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்தபோது, ‘என்னையே வெளியில் அனுப்பிட்டாங்க, என்னிடம் சிபாரிசு கேட்டால் எப்படி. என்னால் முடியாதுப்பா, எனக்கே அங்க வேலையில்லை, இனிமேல் என்னைப் பார்க்க இங்கே வராதீங்க’ என்று அவர்களிடம் நடராஜன் புலம்பியிருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic