2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் பொற்காலம் என்று கூறலாம், 6 ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு அவருக்கு அவ்வாறே அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே ஐந்து படங்களை கையில் வைத்திருக்கிறார். இவரது ‘புரியாத புதிர்’ வருகிற பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது. தற்போது புஷ்கர்-காயத்ரி இயக்கி வரும் ‘விக்ரம் வேதா’ திரைப்பட வேலைகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதியை இயக்குநர் கோகுல் தனது படத்துக்கு புக் செய்தார். இவர்கள் இருவரின் கூட்டணியின் உருவான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம், விஜய் சேதுபதியின் ஹிட் லிஸ்டில் மறக்கமுடியாத திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ என்ற வதந்திகள் காற்றில் பரவி வந்த நிலையில் அது முற்றிலும் பொய் இது ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படம் என கோகுல் தெரிவித்திருக்கிறார். இதற்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு முடிந்ததும் இதுபற்றிய முழு விபரங்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
Write comments