Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 26, 2016

அல் ஜசீரா ஊடகவியலாளர் எகிப்து அரசால் கைது!


புனையப்பட்ட செய்தி அறிக்கைகளை வெளியிட்டு நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக இயங்கி தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அல் ஜசீராவின் ஊடகவியலாளர் ஒருவர் எகிப்து அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து, “மஹ்மூத் ஹுசைன் கோமா தேச பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்” என எகிப்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. வேறு தகவல்கள் அளிக்கப்படவில்லை. கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா ஊடக நிறுவனத்தின் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பிற்காக ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எகிப்து அமைச்சகத்தில் இருந்து வெளியான அறிக்கை தான் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பதற்கான முதல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. 2015 செப்டம்பர், இஸ்லாமிய குழுவோடு இணைந்து இயங்கியதற்காக வழங்கப்பட்ட தண்டனைக்கு அல் ஜசீரா ஆங்கிலத்தின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். ரகசிய ஆவணங்களை கத்தாருக்கு அளித்த காரணத்திற்காக இரண்டு அல் ஜசீரா ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் மரண தண்டனை வழங்கப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic