தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று ராஜஸ்தானில் ’அன்னபூர்ணா ரசோய்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.இத்திட்டம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ’அன்னபூர்ணா ரசோய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் சேர்ந்து அன்னபூர்ணா ரசோய் உணவகத்தில் உணவு உண்டார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ’’இந்த திட்டத்திற்காக ராஜஸ்தானின் பாஜக அரசு அடுத்த நிதியாண்டிற்கு 4 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல், ஒரு ஆண்டிற்கு 50 கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அளவு சாப்பாடு 5 ரூபாய்க்கும், முழு சாப்பாடு 8 ரூபாய்க்கும் வழங்கப்படும் என கூறினார்.
இதுபோன்று ஆந்திராவில் மலிவு விலையிலான என்டிஆர் அண்ணா உணவகம் திறக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, மறைந்த முதல்வரின் நினைவாக அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த தினேஷ் குமார், என்பவர் அம்மா உணவகம் (Amma's kitchens) தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments