Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 20, 2016

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: ஜெ.,வின் தோழி கீதா நீதிமன்றத்தில் மனு..!


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரின் தோழி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஐந்தாம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டாலும், அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழியும், வழக்கறிஞருமான கீதா என்பவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சொத்துகளை அபகரிக்க நினைப்பவர்களிடமிருந்து அதனை பாதுகாக்க வேண்டும் என கோரியும் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

”ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும். பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக ஜெயலலிதாவை கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன் வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து எனக்கு நட்பு உண்டு.அவரது திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு என் ஆதரவு உண்டு.” என மனுதாரர் கீதா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic