குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். ராகுல்காந்தி, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு வரை பங்கேற்றார்.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்ததற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் நேரில் இரங்கல் கூறியது, தமிழக மக்களுக்கும் எனக்கும் ஆறுதல் தருகிறது. பிரதமர் எனக்கு ஆறுதல் அளித்தது பெருந்தன்மையான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விமான கோளாறுக்கு இடையே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments