உத்திரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி முலாயம் சிங் தலைமையிலும், மகன் அகிலேஷ் யாதவ் தலைமையிலும் பிளவு பட்ட நிலையில் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்குக் கிடைத்தது. கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும், அகிலேஷை ஆதரிக்கும் நிலையில், ஆளும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், இழந்த ஆட்சியை மீட்கும் வேகத்துடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியும், ஆட்சியைப் பிடிக்கும் நோக்கோடு பாஜகவும் களமிரங்கியுள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு களமிரங்கிய காங்கிரஸ் இப்போது பாஜகவின் வெற்றியைத் தடுக்க அகிலேஷ் யாதவோடு இணைந்திருக்கிறது. தான் முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஷீலா தீட்சித்தையும் வாபஸ் பெற்றுக் கொண்டு அகிலேஷ் யாதவோடு இணைந்து விட்டது.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டின்படி சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. விரைவில் தொகுதி உடன்பாடுகள் அறிவிக்கப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகள் போதாது கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம் வலியுறுத்தினர். அவர் கூடுதல் இடங்களை வழங்க இயலாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக உத்தர பிரதேச தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படட நிலையில் சமாஜ்வாடி கட்சியின் இந்த முடிவு உத்தர பிரதேச தேர்தலில் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.
No comments:
Write comments