இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள மாநில பல்கலைக் கழகத்தின் இருநூறாவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியபொது கூறியதாவது,
ஐதராபாத் மற்றும் டெல்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இந்திய பல்கலைக்கழகங்களில் சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடையே தோன்றும் மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்கும் முயற்சி என்பது கற்றலுக்கு மட்டும் விரோதமானது அல்ல, அது ஜனநாயகமற்றது. அறிவை பெற்றுக் கொள்வதற்கு பல்கலைக்கழகங்கள் கண்டிப்பாக சுதந்திரம் அளிக்க வேண்டும் . நாம் அத்தகைய சுதந்திரமான சூழலை பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் பட்டமேற்படிப்பு படித்து முடித்த பின்னர் தங்கள் தேவைகளுக்காக வேலை பார்த்துக்கொண்டே ஆய்வு படிப்பையும் தொடர வேண்டும். ஆய்வு படிப்பில்தான் நாம் மேலும் வளர்ச்சியை எட்ட முடியும். மாணவர்களின் ஆய்வுக்குத் தேவையான அனைத்து பொருளாதார வசதிகளையும் அந்தந்த பல்கலைகழகங்ககளே செய்து கொடுக்க முன்வரவேண்டும் .
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைகழங்களில் மாணவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்துத்வா கொள்கையை பல்கலைகழகங்களில் நுழைத்திட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து கருத்து கூறிய பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
No comments:
Write comments