Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 18, 2017

மாடுகள் கடவுள் மாதிரி - மலையாள நடிகர்


ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டோட வீரமான கலாச்சார‌ம். இப்படி ஒரு வீரமான விளையாட்டை நான் இதுவரை பார்த்ததில்லை என்று பிரபல மலையாள நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது அந்த மாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், அதனை கடவுளாக பார்க்கிறார்கள். ஸ்பெயினில் நடக்கும் புல் பைட் எனும் விளையாட்டை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அதனை நான் புகைப்படமும் கூட எடுத்துள்ளேன்.

அது ஒரு வீரமான விளையாட்டு இல்லை. ஏனெனில் ஒரு மாட்டினை இருட்டிய அறையில் ஒரு வருட காலமாக வளர்த்து. அதன் பின்னர் குதிரை மீது அரங்கத்திற்கு வரும் வீரன், அந்த மாட்டினை குத்தி கொல்வது தான் அந்த விளையாட்டு. இதுதான் அங்கு காலம் காலமாக‌ நடைபெற்று வருகிறது. இதனைப்பார்த்து எல்லோரும் கைதட்டுகிறார்கள்.

ஆனால் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டினை புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால், செருப்பு அணிந்துகொண்டு கூட உள்ளே செல்லக்கூடாது. அந்த அளவுக்கு அந்த இடத்தினையும் தெய்வீகமாக பார்க்கிறார்கள். ஒரு முறையாவது அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டினை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை என கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic