Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 21, 2017

குட் பை ஒபாமா...!


அமெரிக்காவின் அதிபராக‌ கடந்த எட்டு வருடங்களாக மக்களின் பேராதரவுடன் பணியாற்றியவர் பராக் ஒபாமா.

அவரின் பதவி காலம் முடிந்ததையொட்டி, புதிய அதிபராக‌ டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார்.

இதனால் தான் இத்தனை வருடம் இருந்த வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறினார். டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒபாமா மற்றும் அவரின் குடும்பத்தினர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் மேரிலேண்ட் பகுதிக்கு சென்றடைந்தனர்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மேரிலேண்ட் பகுதியில் கலந்துரையாடிய ஒபாமா அதன் பின்னர் தனது மனைவியுடன் கலிபோர்னியாவுக்கு விடுமுறையை கழிக்க செல்கிறார். இந்த விடுமுறைக்கு பின்னர் ஒபாமா தன் குடும்பத்தாருடன் வாஷிங்டனுக்கு வந்து தங்குகிறார்.

காரணம், அவரின் இளைய மகள் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் அது நிறைவடையும் வரை ஒபாமா குடும்பம் அங்கு தான் தங்குவார்கள் என தெரிகிறது. தன்னால் முடிந்த அளவு தனது பணியை நிறைவேற்றியதாக அவர் தெரிவித்தார். குட் பை ஒபாமா...!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic