இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாகவும், நாட்டில் கிறிஸ்தவர்கள் தான் அதிக அளவில் மதமாற்ற செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டுவருவதாக மத்திய ஆமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குஜராத் அமைச்சர் நிர்மலா வத்வானியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது "1947களில் இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 90% இருந்தது. ஆனால் தற்போது அது குறைந்து 72% அடைந்துள்லது. நமது நாட்டில் ஹிந்துக்கள் யாரும் மதமாற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் அதிக அளவில் மறைமுகமாக மத மாற்றம் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 17.5% ஆகும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிர் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Write comments