Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Mar 21, 2017

இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம்.. தீபா

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம் என தீபா கூறியுள்ளார்


சென்னை: இரட்டைஇலை சின்னம் எனக்கே சொந்தம் என்று 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' பொதுச்செயலாளர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.


ம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க. என்பது ஜெயலலிதாவின் சந்தேக மரணத்திற்கு பிறகு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர்.

தொண்டர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எனது தலைமையில் மக்கள் ஆதரவோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்பட்டு வருகிறது.

வாரிசு நான்தான்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம் என்பதை நிரூபிப்பேன். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று என்னை மட்டுமே ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எனக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

குழப்புகிறார்கள்

இந்த பேராதரவை சீர்குலைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்படுத்த என்னுடைய அரசியல் எதிரிகள் முயற்சிக்கின்றனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக திட்டமிட்டு தொண்டர்களையும் வாக்காளர்களையும் பொதுமக்களையும் குழப்பி வருகின்றனர்.

நம்ப வேண்டாம்

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம்.
உங்கள் பேராதரவோடு பேரவை சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்தெறிந்து ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவோம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic