விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக்கோள்களை ஏவுகணைகள் மூலம் செலுத்துவதிலும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்ரோவின் செயல்பாடு சமீப ஆண்டுகளாக சிறப்பாக இருக்கிறது. இதனால் நம்பிக்கையடைந்த உலகநாடுகள் தொடர்ந்து இந்தியாவை, தங்களது செயற்கைக்கோளையும் விண்ணில் ஏவச்சொல்லி கோரிக்கை வைத்து வந்தன. இதனால் இஸ்ரோவின் வரலாற்றில் முதன்முறையாக 8 செயற்கைக்கோள்களைத் தாங்கிக் கொண்டு விண்ணில் சீறிப்பாயக் காத்துக்கொண்டிருக்கிறது BSLV-C35. சரியாக இன்று காலை 9.12 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவுக்காக 371கிலோ எடையுள்ள ‘ஸ்கேட்சாட் 1’ டைப் செயற்கைக்கோளை பருவநிலை முன்னறிவிப்பு ஆய்வுகளுக்காக அனுப்புகிறது இந்தியா. அத்துடன் அமெரிக்கா, கனடா, அல்ஜீரியா போன்ற மற்ற நாட்டு செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டுடன் செல்கின்றன. மிக முக்கியமாக பெங்களூரு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுவிட்டால், உலக நாடுகளின் மத்தியில் விண்வெளி ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவின் மதிப்பும் இந்தியாவின் மதிப்பும் உயரும்.

No comments:
Write comments