ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை 2002-ஆம் ஆண்டில் மர்மக் கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்துவிட்டனர். ரவி சுப்பிரமணியன் அப்ரூவராகிவிட்டார். சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயேந்திரர் உள்பட 9 பேரின் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ராஜமாணிக்கம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்டோர் ஆஜராகினர். இவ்வழக்கில் பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜமாணிக்கம், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் சுந்தரேசய்யர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
No comments:
Write comments