Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 1, 2016

தேர்தலில் 200 தொகுதிகளில் பா.ம.க வெற்றி பெரும்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜி.கே. மணியை ஆதரித்து மேச்சேரியில் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மேட்டூர் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் ஜி.கே.மணி ஓய்வறியா உழைப்பாளி. இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டப்பேரவையில் ஆற்றிய பணிகள் ஏராளம். நான் சட்டமன்றத்திற்கு சென்று என்ன பேசுவேனோ அதைவிட அதிகமாக பேசியவர்.
ஆட்சி அமைக்கும்

ஜி.கே.மணியை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். இவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விட பென்னாகரம் தொகுதியில் அன்புமணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜி.கே.மணியை வெற்றி பெற செய்யவேண்டும். அதற்காக வீடு, வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும். 200 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அன்புமணி ஆட்சிக்கு வரவேண்டும் என எல்லாதரப்பு மக்களும் விரும்புகின்றனர். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ஓமலூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தமிழரசு, சங்ககிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் கண்ணையன் ஆகியோரின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்  கூறியதாவது:–

பா.ம.க. கொள்கையினை போல் வேறு எந்த கட்சிக்கும் கொள்கை இல்லை. 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆண்டு நாட்டை சீரழித்து விட்டன. நாட்டை சீரழித்த திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தவேண்டும். அந்த வகையில் தான் மாற்றம் வேண்டும், முன்னேற்றம் தருகிறேன் என அன்புமணி கூறி வருகிறார். புள்ளி விவரங்களுடன் சொல்லக்கூடிய அன்புமணிதான் அடுத்த முதல்வர் என இளைஞர்கள், படித்தவர்கள், நடுநிலையாளர்கள் முடிவு செய்து விட்டனர். தமிழகத்தில் உள்ள கட்சிகள் மதுவை ஒழிப்போம் என கூறுகின்றன. ஆனால் இதை மக்கள் நம்பவில்லை. மதுவை அன்புமணியால் மட்டுமே ஒழிக்கமுடியும் என மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic