Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 1, 2016

மணப்பாறை முருக்கு செய்வது எப்படி...?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கு. அதிலும் மணப்பாறை என்ற ஊர் முறுக்குக்கு மிகவும் பிரபலம். முறுக்கு என்றாலே அது மணப்பாறை முறுக்கு தான் என்னும் அளவிற்கு அத்தனை பிரபலம். முறுக்கு சைடு டிஷ்கேள்லாம் ஒரு உன்னதமான பாஸ். இந்த முறுக்கு நாம் அன்றாட உண்ணும் உணவுடன் சாப்பிடலாம். அது மட்டும் அல்லாமல் இந்த முறுக்கு, மாலை நேர உணவாகவும் சாப்பிடலாம். இந்த முறுக்கை சகில்ஸ் என்று வாடா நாட்டினர் அழைப்பர். இது தமிழ் நாட்டின் பாரம்பரிய ஸ்நாக்ஸில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த முறுக்கை முன்னொரு காலத்தில் பாரம்பரியத்திற்கு செய்யப்படும் இந்த முறுக்கின் பிறப்பிடம் மணப்பாறையே இதன் அடைமொழியாக மாறி மணப்பாறை முறுக்கு என்று அழைக்கப்படுகிறது.

மணப்பாறை முறுக்கு தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு -1 கிலோ உளுத்தம்பருப்பு மாவு - சிறிதளவு: இரண்டையும் நன்றாக கலந்து, அதனுள் ஜீரகம், எள், பெருங்காயம், ஓமம், சுமார் 10 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனுடன் எண்ணெய் ஊற்றினால் அச்சிலிருந்து மாவு சுலபமாக வெளியேறும். இந்த கலவையை சிறிது சிறிதாக எடுத்து முறுக்கு சுற்றும் அச்சில் வைத்து தங்கள் இஷ்டம் போல் முறுக்கு வடிவத்தில் பிழிந்து எடுக்கவும். பின்பு இதை நன்றாக உலர வைக்கவும். நன்றாக உலர்ந்த பின் அதை மிதமானை சூட்டில் எண்ணையில் பொறித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட்டு முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொறித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். மொரு மொருப்பு தன்மையை பத படுத்த, காற்று கூட புகாத ஒரு டப்பாவில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். என்னதான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும், மணப்பாறை முருக்கின் ருசி போல் அமைவது கடினம் தான். மணப்பாறை தண்ணீரின் அந்த அதீத உப்பின் அளவும் மற்றும் அதற்காகவே விளைய வைக்கும் அரிசிதான் இந்த மணப்பாறை முருக்கின் தனித்துவம்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic