கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகமே குளிர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக பெய்த மழையில் செம்பரம்பாக்கத்தில் அதிகப்பட்சமாக 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக கும்மிடிப்பூண்டியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வந்த வெப்பத்தால் கடும் அவதிப்பட்டு வந்த மக்கள் இன்னும் கத்திரி வெயிலை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
ஆனால் மக்களின் கவலை தீரும் வகையில் கத்திரி தொடங்கிய சில தினங்களிலேயே தமிழகத்தில் கோடை மழை தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் கன மழையாக பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வியாபாரம் முதல் அலுவலகம் வரை மந்தமான நிலையிலேயே இயங்கியது. சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து மந்தமாக காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அளவு: (மில்லி மீட்டரில்) பொன்னேரி 32, ஊத்துக்கோட்டை 10, கும்மிடிப்பூண்டி 2, திருத்தணி 12, திருவள்ளூர் 15, பூந்தமல்லி 32, அம்பத்தூர் 26, பூண்டி 14, செம்பரம்பாக்கம் 120, சோழவரம் 37, தாமரைப்பாக்கம் 37, செங்குன்றம் 30 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments