Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 1, 2016

டயரே இல்லாத வண்டி மநகூ - விந்தியா கடும் தாக்கு

மக்கள் நல கூட்டணி டயரே இல்லாத வண்டி. கடைசி வரை நிக்குமே தவிற நகராது என்று அதிமுகவின் பேச்சாளர் நடிகை விந்தியா சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.

அதிமுகவின் நட்சத்திற பேச்சாளரகா உருவெடுத்திருக்கும் நடிகை விந்தியா சென்ற பாராளுமன்ற தேர்தலை காட்டில் இந்த சட்டமன்றத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்களில் அனல் பறக்கும் பேச்சு பல அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என அனைவரையும் சகட்டு மேனிக்கு திட்டி பேசி வருகிறார்.

சிதம்பரம் மேலரத வீதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளோ எனக்கு திருநாள் என்று சொன்னவர் கருணாநிதி. எனவே நடராஜரை உடைக்க நினைக்கிற கருணாநிதிக்கு ஒட்டு போடுவீர்களா, மக்களுக்காக நல்லாட்சி தரும் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், திருமாவளவன் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் விஜயகாந்தை, அம்பேத்கர் வடிவில் காண்கிறேன் என கூறியதை கேட்டபின் திருமாவளவன் மீது இருந்த மரியாதை போய்விட்டது. கடந்த தேர்தலில் விஜயகாந்த் தண்ணி வண்டி, குடிகாரன் என கூறிய திருமாவளவன், தற்போது அவரை கண்ணியமான அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். டயரே இல்லாத வண்டி மக்கள் நலக்கூட்டணி. அந்த வண்டி கடைசி வரைக்கும் நிற்குமே தவிர நகராது. தமிழ்நாட்டு அரசியலில் பகல் கனவு காணுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும்தான் என நடிகை விந்தியா பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic