Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 17, 2016

2016 இறுதிக்குள் இராமர் கோயில் கட்டும் பணி துவங்கப்படும் - சு.சுவாமி

2016 இறுதிக்குள் அயோத்தியில் இராமர் கோயில் கட்டும்பணி துவங்கப்பட்டுவிடும் என ராஜ்யசபா எம்.பி.யும் பா.ஜ.கவின் தேசிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி அரசின் இரண்டாண்டு ஆட்சி முடிந்ததையடுத்து இது தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த சு.சாமி பேசும்போதும் "அயோத்தியில் இராமர் கோயில் கட்டும்பணி இவ்வருட இறுதிக்குள் துவங்கப்பட்டுவிடும். அதேபோல் ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு ஆர்டிக்கல் 370ன் படி வழங்கப்பட்டிருக்கு சிறப்பு அந்தஸ்து வருகின்ற 2017ஆம் ஆண்டு முடிவதற்குள் ரத்து செய்யப்படும். இராமர் கோயில் தொடர்பான வழக்கின் முடிவு ஓரிரு மாதத்தில் வந்துவிடும், இவ்வழக்கின் விசாரணை எங்களுக்கு சாதகமாகவே சென்று கொண்டிருக்கிறது" என்று பேசினார்.


இதே நிகழ்ச்சியில் பங்கெடுத்த மற்றொரு எம்.பியான அசசுத்தீன் உவைசி பேசும்போது "ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது உங்களது (பா.ஜ.கவின்) தேர்தல் தந்திரம், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்கும் சொந்தம் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். சு.சாமி சொல்வது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை காரணம் தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் ஆவணங்களை மொழி மாற்றம் செய்வதற்கே 6 மாதங்கள் ஆகும்" என்று பதிலளித்தார்.

ஜம்மு கஷ்மீர் தொடர்பான சு.சாமியின் கூற்றுக்கு பதிலளித்த அவர் "ஜம்மு கஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கு இந்த சிறப்பு அந்தஸ்த்து அந்த இரு மாநிலங்களும் பிரிந்துவிடாமல் ஒன்றாக இருந்து இந்தியாவின் மாநிலமாக இருப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறும் பா.ஜ.க ஏன் அம்மாநிலத்தில் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்தபோது அதுபற்றி வாய்திறக்கவில்லை?" என கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமியர்கள் இந்துக்களை விட இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சுப்பிரமணி சுவாமி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த உவைசி, இந்தியாவில் ஜனநாயகம், அரசியலமைப்புச்சட்டம் இருக்கின்ற வரை இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இருக்கும், இதை சுப்பிரமணிய சுவாமியோ அல்லது பா.ஜ.கவோ தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று உவைசி பதிலளித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic