தனக்கு ஏற்பட்ட இந்த சோகத்தை பற்றி கூறும்போது "என்னை அவர்கள் சிறையில் அடைத்த போது எனக்கு வயது 20, தற்பொது எனக்கு 43 வயது ஆகிவிட்டது. நிரபராதி என நான் இப்பொழுது வெளியே வந்தாலும் ஒரு நடை பிணமாகவே வாழ்கிறேன். 8150 நாட்கள் சிறையில் கழித்து விட்டேன், எனது வாழ்வு முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. என்னை சிறையில் அடைத்த போது என் தங்கைக்கு வயது 12, இப்போது அவளுக்கு 12 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. எனது மைத்துனி என்னை விட இரண்டு வயது அதிகம், இப்போது அவர் பாட்டியாக இருக்கிறார். நான் சிறை சென்றுவிட்ட வந்த பிறகும் என்னுடைய குடும்பத்தில் ஒரு சந்ததியே வந்துவிட்டது. எனது வாழ்வில் கிடைக்கவேண்டிய குடும்ப பாசம், ஆசை என அனைத்தையும் இழந்துவிட்டேன்" என கண்ணீர் மழ்க கூறினார்.
என்னை அவர்கள் விடுதலை செய்த போது ஜெய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்தனர், அங்கு தூங்குவதற்காக கட்டில் போடப்பட்டிருந்தது, அதில் நான் படுத்தும் எனக்கு தூக்கம் வரவில்லை காரணம் சிறையில் இத்தனை வருடங்களாக தறையில் தான் படுத்திருக்கிறேன். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது 1994ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் குல்பர்காவில் என் வீட்டின் அருகே வைத்து போலிஸார் என்னை கைது செய்தனர். அப்போது மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். 15 நாட்களில் நான் தேர்வு எழுத வேண்டியிருந்தது. எனது கல்லூரிக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய ஒரு காவலாளி துப்பாக்கியை என்னை நோக்கி காடி வண்டியில் ஏறுமாறு கூறினார். எனது கைது தொடர்பாக கர்நாடக காவல்துறைக்கு எதுவும் தெரியாது எனவும், என்னை கைது செய்தது ஐதராபாத் காவல்துறையினர் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.
ஜனவரி 15ம் தேதி கைது செய்யப்பட்ட நிஜாருதீன் பிப்ரவரி 28ஆம் தேதிதான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதன் பிறகே அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் ஏப்ரலில் நிஜாருதீனின் இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டனர். அவர்களின் தந்தை தன்னுடைய மகன் ஒரு அப்பாவி என்றும், எந்த தவறும் செய்யவில்லை என்று நீரூபிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போனது. ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டதால் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஒட்டு மொத்த குடும்பமும் தத்தளித்தது. பின்னர் 2008ஆம் ஆண்டு நிஜாருதீன் தவிற அவரது இரு சகோதரர்களும் பினையில் விடுவிக்கப்பட்டனர்.
சிறைச்சாலையிலிருந்தவாரே நிஜாருதீனும் அவரது சகோதரர்களும் தாங்கள் அனைவரும் அப்பாவிகள், தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என நீதிமன்றத்திற்கு மனு அளித்துக்கொண்டே இருந்தனர். இருதியில் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் இவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
தங்களை விடுதலை செய்ததற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம், ஆனால் தொலைத்துவிட்ட எங்களது வாழ்கையை நாங்கே எங்கே தேடுவோம்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

No comments:
Write comments