Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 23, 2016

6வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார் ஜெயலலிதா


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 இடங்களை பெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பதவி ஏற்பு விழா இன்று நன்பகல் 12 மணி அளவில் சென்னை பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா 11:50 மணி அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார். அங்கே குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பழித்தனர். ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு மேடைக்கு சென்று அமர்ந்தார்.

ஆளுனர் ரோசையா வந்தவுடன் அவருக்கு முதல்வருக்கான பதவிப்பிரமானமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து முதல்வர் பதவியேற்றத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் 28 அமைச்சர்களும் 14 நபர்கள் கொண்ட இரு குழுக்களாக பிரிந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவ்விழாவிற்கு எதிர்கட்சி சார்பில் திமுக பொருளாளர் ஸ்டாலின் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic