சண்டிகர்: சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாபில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டம் தீட்டி அதற்கான பயிற்சிகளை கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வைத்து ஈடுபட்டுவருவதாக உளவுத்துற அதிகாரிகள் கனடா அரசுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளனர்.
பஞ்சாப் மாநில உளவுத்துறை அதிகாரி கூறும்போது காலிஸ்தான் தீவிரவாத படையின் தலைவன் ஹர்தீப் நிஜ்ஜர், இவன் கனடா நாட்டில் அங்கு வசிக்கக்கூடிய சீக்கிய இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்காக பயிற்சிகளை அளித்து வருவதாக தெரிவித்தார். ஹர்தீப்பை சரணடையச்செய்யச்சொல்வதற்காகவும் ஹர்தீப் தொடர்பான ஆதாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஏற்கனவே பஞ்சாப் அரசு அளித்திருக்கிறது.
ஜனவரி 2ல் நடைபெற்ற பதான்கோட் விமான தளம் தாக்குதலிலும் ஹர்தீப்பிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் பஞ்சா அரசு கூறியுள்ளது. கடந்த 1995 முதல் ஹர்தீப் கனடாவில் தஞ்சம் புகுந்து அந்நாட்டு குடுயுரிமை பெற்று வசித்து வருவதாகவும், அங்கிருந்து கொண்டே பஞ்சாபில் நடைபெற்ற முக்கிய தீவிரவாதா தாக்குதல்களுக்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளான் என தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி இந்த ஹர்தீப் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் மற்றொரு தீவிரவாதி மந்தீப் சிங் இரண்டு வாரங்களுக்கு முன் லூதியானாவில் வைத்து பிடிபட்டுள்ளான். அவனும் பாகிஸ்தானில் இயங்கி வரும் சீக்கிய தீவிரவாத அமைப்பான தல் கல்ஷா அமைப்பின் தலைவன் கஜீந்தர் சிங் உடன் தொலைபேசியில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments:
Write comments