சில் நாட்டில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த பூங்காவில் வனவிலங்குகள் இயற்கையான முறையில் வாழ்வதற்கு காடுகளை போலவே அமைக்கப்பட்டு அங்குள்ள வனவிலங்குகள் இயற்கையாகவே மற்ற மிருகங்களை வேட்டையாடி பசியை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை அன்று பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்தனர். அச்சமயம் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒரு மரத்தின் மீது ஏறி, தனது ஆடைகள் அனைத்து கழைந்துவிட்டு நிர்வாண கோலத்தில் தற்கொலை செய்யும் நோக்கில் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் குதித்துள்ளார். இதனை கண்டது சிங்கங்கள் ஒன்றினைந்து அந்த வாலிபரை கொதர ஆரம்பித்தது. அங்கே கூடி இருந்த மக்களின் கூக்குரலை கேட்டதும் வனவிலங்கு அதிகாரிகள் ஓடி வந்து அந்த வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அந்த வாலிபரை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி இரண்டு சிங்கங்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பூங்கா அதிகாரி அலஜெந்த்ரா மோன்டாலபா தெரிவித்தார்.
காப்பாற்றப்பட்ட வாலிபரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இருப்பினும் அந்த வாலிபர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வாலிபரின் முட்டாள்தனத்தால் ஒன்றும் அறியாத விலங்குகள் கொல்லப்பட்டுவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

No comments:
Write comments