சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூர், ராணி மேரி கல்லூர், முகமது சதக் கல்லூரி, அண்ண பல்கலைகழகம், எம்.ஐ.டி கல்லூரி, ஜெய்கோபால் கரோடியா பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்குப்பெட்டிகள் அனைத்தும் தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடக்கு மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையங்களுக்கும் சுமார் 500 போலிஸார் காவலில் ஈடுபட்டுவருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்கள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கன்ட்ரோல் ரூம் மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திலிருந்து 100 கி.மீ தொலைவிற்கு தனிப்பட்ட முறையில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கட்சி தொண்டர்கள் அனைவரும் அதை தாண்டியே இருக்க வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் சங்கர், ஷேசாயி உட்பட பல அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

No comments:
Write comments