தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிவுருத்தியுள்ளார்.
12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வி பயத்தால் கோவை மாவட்டத்தில் சக்தி கணேஷ் என்னும் மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேசும்போது,
தோல்வி என்பது இறுதியான முடிவு அல்ல. அதுவும் வெற்றிக்கு வழிவகுக்க கூடிய ஒன்றே, மாணவர்கள் யாரும் மனம் தளரக்கூடாது. குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் அறிவியல், கலை உள்ளிட்ட எத்துனையோ பிரிவுகளில் வாய்புகள் உள்ளன. மாணவ மாணவிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கூறினார். +2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

No comments:
Write comments