Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

சூர்யாவின் 24 பாகம்-2 அஜித்தின் பில்லா ஸ்டைலில் வருமாம்

அஜித் நடிப்பில் வெளியான பில்லா பட பாணியில், சூர்யாவின் 24 படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது.

அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘பில்லா’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பில்லா 2’ உருவானது. இதில் அஜித் பில்லாவாக எப்படி மாறினார் என்பதை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார்கள். அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘24’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது.


தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், சூர்யாவின் 24 படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 2வது பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான கதையை விக்ரம் குமார் பாதி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகம், அண்ணன், தம்பிகளுக்குள் எப்படி பகை ஏற்பட்டது என்பது பற்றி உருவாக்க இருக்கிறார்களாம். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic