Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

வாங்கிய கடனுக்காக நண்பனுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்!

husband permitted friend to rape his wife

தனது நண்பனிடம் தான் வாங்கிய கடன் ரூபாய் 5000 தை திரும்ப கொடுக்க முடியாததால், தனது மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர சம்பவம் வட இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசித்து வருபவர் நரேஷ். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார். நரேஷ் தனது நண்பர் டின்கு என்பவரிடம் ரூபாய் 5000 கடன் வாங்கியிருக்கிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாத டின்கு தனது நண்பனை வீட்டிற்கு வரவழைத்து தனது மனைவியை கற்பழிக்க அனுமதித்திருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி கூறியதாவது, "ஒரு நாள் எனது கணவர் நரேஷ் அவரது நண்பர் டின்குவுடன் வீட்டிற்கு வந்தனர். இருவரும் மது அருந்திய நிலையில் இருந்தனர். எனது கணவர் டின்குவிற்கு கொடுக்க வேண்டிய கடன் ரூபாய் 5000ற்கு பதிலாக என்னை கற்பழிக்க அனுமதி கொடுத்தார். டின்குவும் என்னை கற்பழித்துவிட்டு நடந்ததை வெளியே சொன்னால் எனது சகோதரர்களை கொன்றுவிடுவதாக மிரட்டினார். டின்கு சென்ற பிறகு எனது கணவரும் என்னோடு வழுக்கட்டாயமாக உறவு வைத்தார்" இவ்வாறு தெரிவித்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். காவல்துறையினரிடம் அப்பெண்ணின் கணவர் இதனை முற்றிலுமாக மறுத்தார். ஆனால் அவரது நண்பர் டின்குவிடம் விசாரிக்கும்போது தான் நரேஷின் மனைவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic