12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ மாணவிகள் தங்களுடைய மதிப்பெண்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் +2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி முடிவுற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 6550 பள்ளிகளில் படித்த சுமார் 8 லட்சத்தி 39ஆயிரம் மாண மாணவியர் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பட்டியல்கள், மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அரசு டேட்டா சென்டரின் நடைபெற்றது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். நாளை காலை 10:30 மணியளவில் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
இது தவிற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்லலாம். மேலும் வருகின்ற 21ஆம் தேதி மதிப்பெண் பட்டியலையும் பெற்றுக்கொள்ள்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தால் நகல் பெறுதல், மறுகூட்டல் செய்ய விரும்புபவர்கள் அந்தந்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அவர்கல் எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளிகளில் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Write comments