Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

அச்சச்சோ! என்ன கருமம்டா இது...!

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் நிர்வாண ஹோட்டல் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முற்றிலும்  கலப்படமில்லாத இயற்கை உணவு வகைகள் பரிமாறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் இயங்கி வரும் பிரபல உணவகம் "தி புன்யாடி", இந்த உணவகத்தின் சார்பாக வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் புதிய கிளை ஒன்றை திறக்கயிருப்பதாகவும் அந்த உணவகத்தில் தற்காலத்தில் உணவருந்த உபயோகப்படுத்தப்படும் எந்தவித உணவு வகைகளையும், மசாலா வகைகளையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்க்கை உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண விடுதிகளில் இருப்பது போல, ஏ.சி, டேபிள், லைட், கிளாஸ் போன்றவைகள் எதுவும் உபயோகிக்கப்படாது என்றும் முழுக்க மண்ணால் ஆன பாத்திரங்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்னொரு அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில் இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் உள்ளே நுழைந்தவுடன் தங்களது ஆடைகளை கலைந்துவிட்டு ஒரே ஒரு வெள்ளை டவலை மட்டும் உடுத்திக்கொண்டு தான் அமரவிரும்பும் இடத்திற்கு சென்றிட வேண்டும். பின்னர் அதையும் கலைந்துவிட்டு நிர்வாணமாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் மூங்கிலான குச்சிகளை கொண்டு மறைவு ஏற்படுத்தப்பட்டிருக்குமாம். நிர்வாணமாக அமர்ந்து சாப்பிட விரும்பாதவர்களுக்கு தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்போன் எடுத்துச்செல்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உணவகம் லண்டன் நகரில் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்காததால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்த உணவகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

காலத்தின் சூழ்நிலையால் உணவு வகைகளில் கலப்படம் கலந்துவிட்ட நிலையில் இயற்கையான உணவு கிடைக்காதா என்று பலரும் ஏங்குகின்றனர். அந்த வகையில் பழங்கால உணவு வகைகளை விரும்புவது ஒன்றும் தவறல்ல அதே சமயத்தில் நாகரீகத்தையும் தொலைத்து ஆதி மனிதன் போல ஆடையில்லாத கலாச்சாரத்திற்கு செல்வோம் என்று கூறுவது என்னவோ பைத்தியக்காரத்தனம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமோ...?


- புகழேந்தி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic