கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தான் எல்லையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தாலிபான் அமைப்பின் தலைவர் மன்சூர் அக்தர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதனை தாலிபான் அமைப்பு ஒப்புக்கொண்டு, மன்சூர் அக்தருக்கு அடுத்தபடியாக புதிய தலைவராக முல்லா கைபதுல்லா செயல்படுவார் என தாலிபான் தெரிவித்துள்ளது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தாலிபான் அமைப்பினரின் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
No comments:
Write comments