Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 26, 2016

பினராயி விஜயன் பதவி ஏற்றார்


கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி ஜனநாயக முன்னனி வெற்றி பெற்றதை தொடந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி 91 இடங்களை பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனை அடுத்து முதல்வர் உம்மண்சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்றைய தினம் புதிய அரசுக்கான பதவி ஏற்பு விழா தலைநகர் திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது.

ஆளுனர் சதாசிவம் முதலைமைச்சர் மற்றும் 18 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்று 18 மந்திரிகளில் 13 பேர் புதிய முகங்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் முதல்வருமான அச்சுதானந்ததே இம்முறையும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வெற்றிக்கு கடுமையா உழைத்த பினராயி விஜயன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனால் அச்சுதானந்தன் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்சியில் முன்னால் முதல்வர் உம்மண்சாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic