திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டன் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலையத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தேர்தலி 89 இடங்களில் வெற்றி பெற்ற திமுக அணி பலம்பொருந்திய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவராக யார் செயல்படுவார் என்ற கேள்வி இருந்தது.
எதிர்கட்சி தலைவர் என்பது மந்திரிகள் அளவிற்கு சமமான வசதிகள் வழங்கப்படும். இந்நிலையில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக துரைமுருகன் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான இருக்கை வசதி செய்து தரப்பட்டால் சட்டமன்ற கூட்டத்தில் பங்கெடுப்பேன் என ஏற்கனவே கருணாநிதி கூறியிருந்தார், இந்நிலையில் மு.க ஸ்டாலினை எதிர் கட்சித்தலைவராக ஆக்கியதால் இம்முறையும் சட்டமன்ற விவாதங்களில் கருணாநிதி பங்கெடுக்கமாட்டார் என்றே தெரிகிறது.
முன்னதாக கருணாநிதி சட்டமன்றத்திற்கு வருவாரேயானல் அவருக்காக முறையான இருக்கை வசதி செய்துதரப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments