கடந்த 15 மாதங்களாக தமிழக மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கடைசி நேரத்தில் திமுகவும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கின்றனர். ரூபாய் 500 முதல் 5000 வரை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது. தேர்தல் கமிஷனிடம் எத்துனை முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரம் இல்லாத ஆணையமாகவே தேர்தல் ஆணையம் இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு வெளி மாநில அதிகாரிகளை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகளாக வெளி மாநிலத்தவரையே நியமிக்கவேண்டும். அப்படி செய்தால் தான் தமிழகத்தில் நேர்மையான வாக்குப்பதிவை எதிர்பார்க்க முடியும். திருப்பூரில் பிடிபட்ட லாரிளைல் இருந்த 570 கோடி ரூபாய் யாருடையது என்பதை விசாரிக்க வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும். ஸ்டேட் வங்கி தன்னுடைய பணம் தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்லும்போது பாதுகாப்பிற்கு காவல்துறையோடு வராதது ஏன்? இவ்வாறு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

No comments:
Write comments