Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

தமிழக, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 இடங்களிலும் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தஞ்சாவூர் மற்று அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் தவிர மற்ற 232 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு விருவிருப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ததால் அச்சமயம் மட்டும் வாக்குப்பதிவில் மந்த நிலை காணப்பட்டது. இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் வாக்களார்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதில் சிறமம் ஏற்பட்டது. சென்னையில் முதலைமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட ஏராளமான தலைவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். அதே போன்று பல சினிமா நடச்சத்திரங்களும் வந்து வாக்களித்தனர்.

தமிழகத்தில் நிலவரப்படி மாலை 6 மணி வரை 69.19% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போல கேரளா மற்றும் புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 71% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

சிறு சிறு சம்பவங்கள் ஓரிரு இடத்தில் நடந்ததை தவிற வேறு எந்த அசம்பாவித சம்பவம் நிகழவில்லை. ஆமைதியான முறையில் நடைபெற்ற வாக்குபதிவு வருகின்ற 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எண்ணப்பட்டு முடிவுகளும் அன்று மாலையே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic