Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

பெண்களுக்கென வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் சவுதி அரசு


ரியாட்: சவுதி அரேபியால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு தளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்கள் நாட்டு பெண்கள் அதிக அளவில் பணியில் அமர்தப்பட இருப்பதாகவும் அந்நாட்டு தொழிற்துரை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற நிலையிலிருந்து மாறுபட்டு தற்போது சவுதி அரசு பல்வேறு துறைகளில் தங்களுக்கே உரித்தான விதிகளோடு பெண்களுக்கென பல்வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் தளங்களை உருவாக்கி வருகிறது.  இதன் மூலம் வருகின்ற இரண்டு மாதத்திற்குள் 50,000 பணிகளில் பெண்கள் அமர்தப்படுவார்கள் என சவுதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவுதி அமைச்சகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, தங்கள் நாட்டு பெண்கள் இதற்கு முன்பு ஆண்களைப்போல் வேலைக்கு அனுப்பப்பட்டதில்லை என்றும் அவர்களுக்கான முறையான வசதிகள் இல்லாததாலும் அவர்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதனை மாற்றும் விதமாக முழு நேரப்பணியும், வீட்டிலிருந்தே பகுதி நேரப்பணியை மேற்கொள்ளும்விதமாம பல்வேறு துறைகளில் எங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இருக்கும்படி உருவாக்கப்படும் வேலைகளில் பெண்கள் அமர்த்தப்படவிருக்கிறார்கள். இதன் மூலம் சராசரியாக 3000 முதல் 9000 ரியால்கள் வரை அவரக்ளால் மாதம் சம்பாதிக்க முடியும் இதற்கான தொழிற்துறை பயிற்சிகள் பெண்களைக்கொண்டே நடத்தப்பட்டு வருவதாகவும்  அந்நாட்டு அமைச்சர் அப்துல்மொபீன் அல் ஜெஹ்ரி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic