Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

கருத்துக்கணிப்பு பொய்யாகும் ஊடகங்கள் தங்களது தொழிலை கைவிடவேண்டும் - அன்புமணி

தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு பொய்யானால் தங்களுடைய ஊடகத்தொழிலை கைவிடுவார்களா? என பா.ம.கவின் முதல்வர் வேட்பாளர் திரு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பொன்னகரத்தில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது,
பொன்னரகரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு 500, 1000 என கொடுப்பதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள். கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் இந்த இரு கட்சிகளுமே வேண்டாம் என திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டார்கள்.


தேர்தல் ஆணையம் செயலிழந்து இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் போலியான வாக்களர்கள் தொடர்பாக எத்துனை முறை நடவடிக்கை எடுக்ககோரி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை வெளியிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஊடகமும் வெவேறு கட்சிதான் ஆட்சியமைக்கும் என்று தாங்கள் நடத்திய கருத்து கணிப்பை வெளியிடுகின்றனர். தேர்தல் நடைபெறுவதற்கும் இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இவ்வாறு இவர்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுவதற்கான நோக்கம்தான் என்ன? ஏதாவது ஒரு கட்சித்தான் ஆட்சியை பிடிக்கும், அப்படியானால் தங்களுடைய கணிப்பு பொய்யாகும் ஊடகங்கள் தங்களது ஊடக தொழிலை கைவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic